நித்தியா மேனனின் புதிய அவதாரம்…

நித்தியா மேனனின் புதிய அவதாரம்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நித்தியா மேனன். பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது பாடகி அவதாரம் எடுத்துள்ளார். 

இதுகுறித்து இவர் அளித்த சமீபத்திய பேட்டியில்,” சிறுவயதிலேயே எனக்கு பாட பிடிக்கும். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. எனது முதல் இசை பாடல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனக்கு 4 மொழிகள் தெரியும், கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. இயக்குநர் ஆக வேண்டும் என்பது கனவு. எப்படியும் இயக்குநர் ஆகிவிடுவேன்” என்று கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், ”சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகனை மையமாக வைத்தே படங்கள் எடுக்கிறார்கள். அந்த மாதிரி படங்களில் நடிப்பதை விட புதுமாதிரியான நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் 2 ஆடல் பாடல் காட்சிகளில் வருவது மலையேறிவிட்டது. ரசிகர்களே அதை ஒதுக்கி விட்டார்கள். அதுமாதிரி படங்களை ஒப்புக்கொண்டு இருந்தால் எனது கணக்கில் நிறைய படங்கள் சேர்ந்து இருக்கும்” என்று தெரிவித்தார். 

அத்துடன் "கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக செய்தி பரவி வருகிறது. எனது சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் எல்லோருக்கும் நடக்காது என்று நான் சொல்ல வரவில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ? அதுபோல் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்" என்று கூறினார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்