தலைவர் 166யில் நயன் மற்றும் கீர்த்தி சுரேஷ்?

தலைவர் 166யில் நயன் மற்றும் கீர்த்தி சுரேஷ்?
தலைவர் 166யில் நயன் மற்றும் கீர்த்தி சுரேஷ்?

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் எனக் கூறி தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் எனக் கூறி தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார். இதன் பின் முழுவீச்சில் அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நடிப்பில் வெளியான 2.0 மற்றும் பேட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெறவே தான் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இப்படம் தலைவர் 166 என கூறப்படுகிறது. இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பேட்ட படத்தினை போலவே இப்படத்திலும் ரஜினிக்கு இரண்டு ஜோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரு கதாபாத்திரங்களில் நடிக்க நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com