கேபிள் டிவியில் தர்பார் படம்… படக்குழு அதிர்ச்சி…

கேபிள் டிவியில் தர்பார் படம்… படக்குழு அதிர்ச்சி…

ரஜினியின் தர்பார் படம் கேபிள் டிவி சேனலில் ஒளிபரப்பட்டது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 9ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் படைத்து வருகிறது.

இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் தர்பார் படம் ஒளிப்பரப்பானது. இதனை அறிந்தவுடன் ரஜினி மக்கள் மன்றத்தினர் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

தர்பார் திரைப்படம் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் பட த்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்