திரௌபதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்தாரா அஜித்? விளக்கம் அளித்த இயக்குநர்…

திரௌபதி படக்குழுவினரை அஜித் வாழ்த்தியதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் மோகன். ஜி விளக்கம் அளித்துள்ளார். 

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் திரௌபதி. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான இப்படம் கூட்டு நிதிமுறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் ட்ரைலர் கடந்த 3ம் தேதி வெளியாகி பல சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்ததாக, அஜித்- இயக்குநர் மோகன் ஜி இருக்கும் போட்டோ வைரலானது. 

இந்நிலையில் இந்த செய்தி தொடர்பாக இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “வதந்திகளை நம்பாதீர். திரௌபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலாவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார். 

இதனால் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்