இதுவரைப் பார்க்காத சிம்பு… மாநாடு படம் குறித்து வெங்கட்பிரபு ஓபன் டாக்

சிம்பு, சிந்தர். சி இயக்கத்தில் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படம் நிறுத்தி வைக்கப்பட்ட து. 

இதனை தொடர்ந்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் கதாநாயகியாக ’ஹீரோ’ பட நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார், மற்றும் வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மாநாடு படம் குறித்து வெங்கட்பிரபு பேசுகையில், “மாநாடு எனக்கும் சிம்புவிற்கும் சவால்கள் நிறைந்த படம். இதுவரைப்பார்க்காத சிம்புவை தமிழக மக்கள் பார்க்க விருக்கிறார்கள். முழுக்க முழுக்க அரசியல் பாவனைகளும் நிறைந்த சிம்புவாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
    59.49%
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
    29.75%
  • அதிருப்தி
    4.43%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை
    6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்