அப்பாவின் கனவை நனவாக்கிய பேபி மானஸ்வி!

அப்பாவின் கனவை நனவாக்கிய பேபி மானஸ்வி!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக வலம் வருபவர் கொட்டாச்சி. முன்னணி காமெடி நடிகர்களுடன் சின்ன சின்ன வேடங்களில் மட்டுமே நடித்தார். அவருக்கு தனி காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

தற்போது அவரது மகள் மானஸ்வி பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளையடித்தார். அதன்பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அவர் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது.  

இந்நிலையில் கொட்டாச்சி தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சொந்த வீடு வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை என்றும், அந்த கனவை தனது மகள் நிறைவேற்றி விட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்