தமிழை மறக்காமல் இருப்பதற்கு ரசிகர்களின் அன்பே காரணம்; ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி!

தமிழை மறக்காமல் இருப்பதற்கு ரசிகர்களின் அன்பே காரணம்; ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி!

நான் எவ்வளவு உயரமாக சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு ரசிகர்களின் அன்பு மட்டுமே காரணம் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ்  திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். அதைத்தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், இசைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளை பெற்றுள்ளார். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கில படத்தில் இசையமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றிருக்கிறார். ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்து தமிழனின் பெருமையை உலகெங்கும் புகழச் செய்தவர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் குறித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான், என் இசையில் 50% வைரமுத்துவின் தமிழ் இருக்கிறது என்றும் அதற்கான மரியாதை எப்போதும் உண்டு. நான் மீண்டும் வைரமுத்துவுடன் இணைவேனா என்பதை பின்னர் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், திரைத்துறை, பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள ஏ.ஆர்.ரகுமான், நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், தமிழை மறக்காமல் இருப்பதற்கு ரசிகர்களின் அன்புமட்டுமே காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்