இளையராஜா பயோபிக் படம்.. ஹீரோ இவர் தான்.. யுவன் பளீச்!

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை படமாக்குவதில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர், நடிகைகளும் இதுபோன்ற படங்களில் நடிப்பதையே விரும்புகின்றனர். 

இசை உலகில் தனக்கென  தனி தடத்தை பதித்தவர் இளையராஜா. அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கும் யோசனை தனக்கு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘அந்த படத்துக்கு ராஜா தி ஜெர்னி என்ற தலைப்பு மிக பொருத்தமாக இருக்கும்.

இந்தப் படத்தின் மூலம் நான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இளையராஜா வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால், இசைஞானி கதாப்பாத்திரத்தில் நடிக்க தனுஷ் பொருத்தமாக இருப்பார்’ என கூறியுள்ளார். அதனால் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்