நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தினை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தினை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட
பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா நடிகர் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டு ரஜினிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதில், ‘ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதே என்னுடைய இளைய மகளின் நீண்ட நாள் கனவு. அது நிறைவேறி விட்டது.
அந்த நிகழ்வின் போது தனது இதயமே நின்று விட்டதை போல் உணர்ந்ததாக அனந்திதா தெரிவித்தார். மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல், எனது மகளுக்காக நேரத்தை செலவிட்ட ரஜினிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.