திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களது ஃபிட்னஸ் ரகசியங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.
திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களது ஃபிட்னஸ் ரகசியங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமன்னா தனது ஃபிட்னஸ் குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது, ‘காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பேன். அதன்பிறகு ஊறவைத்த பாதாம்களை சாப்பிடுவேன். காலையில் இட்லி, தோசை, ஓட்ஸ் இதில் ஒன்றை எடுத்துக் கொள்வேன். மதியம் ஒரு கப் சாதத்துடன் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வேன்.
இரவு நேரங்களில் புரோட்டீன் அதிகம் உள்ள முட்டை, சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்வேன். இதுதவிர தினமும் யோகா, உடற்பயிற்சி தவறாமல் கடைபிடிக்கிறேன்’ என கூறியுள்ளார்.