குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். சில இடங்களில் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுபற்றி பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறுகையில், ‘இந்த சட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ நிலைப்பாடு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் போராட்டம் நடத்த வேண்டாம். வாகனம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தக் கூடாது. தங்கள் தரப்பை, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்க்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தின் வீடியோ பதிவுக்கு அக்ஷய் குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். அதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.