ஆரவ் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…

ஆரவ் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…
ஆரவ் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரவ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது அவரது நடிப்பில் ராஜபீமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார்.

மேலும் நாசர், ஷியாஜி ஷிண்டே, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓவியா ராஜபீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்தும் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் படக் கதையில் திருப்பு முனையாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com