காத்துக் கொண்டிருக்கிறேன்… மனம் திறக்கும் மஞ்சு வாரியர்!

காத்துக் கொண்டிருக்கிறேன்… மனம் திறக்கும் மஞ்சு வாரியர்!

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன்.

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சாதியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பேசக் கூடிய படமாகும். இப்படத்தினை திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டினர்.

அசுரன் படத்தில் பச்சையம்மா கதாப்பாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் மஞ்சு வாரியர். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றுக்காக அவர் சென்னை வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ‘அசுரன் படம் வெளியாவதற்கு முன்பு நான் அடிக்கடி சென்னை வந்திருக்கேன். ஆனால் அசுரன் படத்திற்கு பிறகு சென்னை வருவது ஸ்பெஷலாக இருக்கிறது. என்னை அடையாளம் கண்டுகொண்டு ரசிகர்கள் வந்து பேசுகிறார்கள்.

தமிழில் மேலும் நல்ல படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com