மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்… காரணம் இதுதான்..

மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்… காரணம் இதுதான்..

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவர் போடா போடி, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘எனது மகள் சினிமா துறையில் நுழைவதற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. சொந்த முயற்சியில் அவர் வளர்ந்து கொண்டார். அவரது முதல் படம் போடா போடி வெளிவருவதற்கு நான் அவருக்கு உதவி செய்யவே இல்லை. அதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அவர் தைரியமான பெண். சக்தி நிறைந்தவர். அவர் தனது திறமையால் தன்னை முன்னேற்றி கொண்டிருக்கிறார்’ என கூறியுள்ளார்.  சரத்குமார் தனது மகளுடன் இணைந்து முதல்முறையாக பிறந்தாள் பராசக்தி படத்தில் நடிக்கிறார். ராதிகாவும் அதில் நடிக்கிறார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com