முஸ்லீமாக மாறியதை உறுதி செய்த ஜெய்…

முஸ்லீமாக மாறியதை உறுதி செய்த ஜெய்…

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் அவரது தம்பியாக நடித்து அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனை தொடர்ந்து சென்னை-28, கோவா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். இறுதியாக அவரது நடிப்பில் கேப்மாரி திரைப்படம் வெளியானது. தற்போது சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகும் பிரேக்கிங் நியூஸ் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாக சமீபகாலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் இதனை ஜெய் உறுதி செய்யாமல் இருந்தார். இந்நிலையில் அவர் தனது சமீபத்திய பேட்டியில், ‘ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை.

சாமியே கும்பிடாதவன், ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே என வீட்டிலும் ஏதும் சொல்லவில்லை. மதம் மாறினாலும் பெயரை இதுவரை மாற்றவில்லை. அஜீஸ் ஜெய்யாக மாறலாம் என முடிவு செய்துள்ளேன்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்