பாலிவுட்டில் பட்டைய கிளப்ப ரெடியாகும் ஷாலினி பாண்டே...

பாலிவுட்டில் பட்டைய கிளப்ப ரெடியாகும் ஷாலினி பாண்டே...

ரன்வீர் சிங் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் ஷாலினி பாண்டே. 

தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் 100 % காதல், கொரில்லா என சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியாகவுள்ள நிசப்தம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். 

ஹிந்தியில் யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ஜயேஷ்பாய் ஜோர்தார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.49%
  • இல்லை
    27.85%
  • யோசிக்கலாம்
    4.95%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.71%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்