பாலாஜி மோகன் - யோகி பாபு இணையும் மண்டேலா...

பாலாஜி மோகன் - யோகி பாபு இணையும் மண்டேலா...

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவரது நடிப்பில் அடுத்து அடுத்து படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இவர் சூப்பர் ஸ்டார் உட்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த தர்பார் படம் 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் யோகிபாபு நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாக தர்மபிரபு மற்றும் கூர்கா படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து யோகிபாபு அடுத்து புதுமுக இயக்குநர் மடேன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மண்டேலா என்ற படத்தில் நடிக்கிறார்.

காதலில் சொதப்புவது எப்படி, மாரி-1 மற்றும் மாரி-2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. இந்தப் படத்தில் யோகிபாபு முடி வெட்டும் தொழிலாளியாக நடிக்கிறார்.  

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.02%
  • தவறான முடிவு
    20.84%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.91%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்