அசுரன் ரீமேக்.. நோ சொன்ன அனுஷ்கா!

அசுரன் ரீமேக்.. நோ சொன்ன அனுஷ்கா!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டினர். திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டினர்.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்காக முதல்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தனுஷ் கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் ஸ்ரேயா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இறுதியில் அனுஷ்காவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்