இயக்குநரால் உயிருக்கு ஆபத்து…. அசுரன் நாயகி புகார்.
தனுஷுடன் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மலையாள நடிகை மஞ்சுவாரியர்.
தனுஷுடன் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் மலையாள இயக்குநர் ஸ்ரீ குமார் தன்னை மிரட்டி அவதூறு பரபரப்புகிறார் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு மோகன்லால், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான ஒடியன் படம் வெற்றி பெறவில்லை. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மஞ்சுவாரியர் பங்கேற்கவில்லை என ஏற்கெனவே இயக்குநர் மற்றும் மஞ்சுவாரியர் இடையில் மோதல் ஏற்பட்டது. பிரோமஷனில் பங்கேற்கவில்லை என பலமுறை மஞ்சுவாரியரை ஸ்ரீ குமார் சாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கேரள டிஜிபியிடம் மஞ்சுவாரியர் ஒரு புகார் அளுத்துள்ளார். அதிக் ஸ்ரீகுமார் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஸ்ரீகுமாரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் கையெழுத்திட்ட லெட்டர் மற்றும் சில ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு இயக்குநர் ஸ்ரீகுமார் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், மஞ்சுவாரியர் தன்மீது கொடுத்த புகாரை ஊடகங்கள் மூலம் தான் தெரிந்துக் கொண்டதாக தெரிவித்திருந்த்தார்.
மேலும் மஞ்சுவாரியர் திலீப்பை விட்டு வெளியேறியபோது தான் தான் அவரது முதல் விளம்பரப் படப்பிடிப்புக்காக ஒப்பந்தம் செய்ததாகவும் அதை தற்போது மறந்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் தான் சாதாரண குடிமகன் என்றும், இந்த வழக்கு விசாரணையை தான் சட்டரீதியாக சந்திக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.