மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. அதன் பிறகு பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். வெளிநாடுகளில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், பின்னர் அதில் இருந்து மீண்டு விட்டார். தற்போது புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இதுபற்றி பேசிய மனிஷா கொய்ராலா, ‘என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதினேன். என்னை பார்த்து யாராவது என்னை பார்த்து விழிப்புணர்வு அடைந்தால் திருப்தியாக இருக்கும். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் பேசும் காலம் வரும்.
ஆரம்பத்தில் இருந்த என்னுடைய மதுபழக்கத்தால் தான் பல துன்பங்களை அனுபவித்தேன். மதுப்பழக்கத்தை விட்ட பிறகு, இப்போது புதிதாக பிறந்த உணர்வு உள்ளது என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.