தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் ரீ மேக்காகியுள்ளது.
தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் ரீ மேக்காகியுள்ளது. விக்ரம் மகன் துருவ், பனிடா சந்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய துருவ் விக்ரம் படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் தனது அப்பா விக்ரம் பற்றி பேசும் போது, ‘அவர் ஒவ்வொரு படத்திலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்துக்கு அவரது படங்களை தாண்டி அர்ப்பணிப்புடன் இருந்தார்.
ஒரு நடிகராக இல்லாமல் அப்பாவாக என்னை இயக்கினார். அவருக்கு 22 வயது இருந்தால் என்ன பண்ணியிருப்பாரோ, அதை என்னை பண்ண வைத்துள்ளார். என் அப்பா, அம்மாவால் மட்டுமே நான் இந்த இடத்தில் நிற்கிறேன். அவரை நான் பெருமைப்படுத்த நினைக்கிறேன். அதனால் தான் இந்த துறையில் இருக்கிறேன் என உணர்வுப்பூர்வமாக பேசினார்.
இந்த பேச்சைக் கேட்ட விக்ரம் கண்கலங்கினார்.