தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றியது. இதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி இணைந்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றியது. இதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி இணைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. ராஞ்சியில் இந்த போட்டி நடைபெற்றது. ராஞ்சி இந்திய நட்சத்திர வீரர் தோனியின் சொந்த ஊராகும். இதனால் இந்த போட்டியை காண சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த போட்டியின் முதல் 3 நாட்களிலும் தோனி பங்கேற்கவில்லை. 4வது நாளான இன்று தோனி நேரில் சென்று ஆட்டத்தை கண்டுள்ளார். இன்றைய ஆட்டம் வெறும் 12 பந்துகளிலேயே நிறைவடைந்து விட்டது. அதனை தொடர்ந்து தோனி அறிமுக வீரர் சபாஷ் நதீமை சந்தித்து பேசியுள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் இவர் மற்ற இந்திய வீரர்களையும் சந்தித்து இந்திய அணியின் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துள்ளார்.