ஹிந்தி திரையிலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப்.
ஹிந்தி திரையிலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது புது முயற்சியாக பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு கே பியூட்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேக்கப் தன்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றியது எனவும், அதன் மீது தான் வைத்திருக்கும் அன்பே கே பியூட்டி எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கான விளம்பரத்தில் கத்ரீனா கைஃப் உடன் நயன்தாராவும் நடித்துள்ளார். இந்நிலையில் நயந்தாராவுக்கு நன்றி தெரிவித்து கத்ரீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ‘தென்னக சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நேரத்திலும் எனது கே பியூட்டி விளம்பரத்தில் பங்கு பெறுவதற்காக மும்பை வந்ததற்கு நன்றி. என்றும் அவருக்கு நான் நன்றியுடன் இருப்பேன். தாராள மனம் கொண்டவர், கனிவானவர் என பாராட்டியுள்ளார்.