பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவின் லாஸ்லியா இடையேயான காதல் பரபரப்பாக பேசப்பட்டது. வீட்டில் இருந்த போது சேரன் அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதனால் தான் இருவரும் இப்போது சந்திப்பது இல்லை என பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது என சேரன் தெரிவித்தார்.
ஆனால் அவருக்கு தொடர்ந்து விமர்சனங்கள் வந்துள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், ‘ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது..சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்..
பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வளைதளங்களில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் ஆபாச படங்களை வீடியோக்களை இணைக்கும் முகவரியற்ற முகங்களை அரசு சட்டப்படி தண்டிக்க ஆவண செய்யவேண்டும்..
திருந்துவார்களா முகமற்றவர்கள்..’ என பதிவிட்டுள்ளார்.