விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்குள் விஜய் ரசிகர்கள் பிகில் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் படத்தில் வயதான தோற்றத்தில் விஜய் நடித்துள்ள ராயப்பன் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கருப்பு சட்டை, காவி வேஷ்டி, கழுத்தில் சிலுவை என இந்த கதாப்பாத்திரத்தின் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால் விஜய் ரசிகர்கள் முதல் நாள் ஷோ பார்க்க செல்லும் போது இந்த உடையில் செல்லலாம் என இந்த உடைகளை வாங்கி வருகிறார்கள். ஒரு சிலர் மதத்தை அடிப்படையாக வைத்து பிகில் உடைகளை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த உடைகளை புகைப்படம் எடுத்து, இதுபற்றிய உங்களது கருத்து என்ன என்று எஸ்.வி.சேகரிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘இதனை பெரிதுபடுத்துவது சரியல்ல. விஜய் நல்ல நடிகர். அவர் விபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு, அவர் சிலுவை அணிந்து நடிக்கும் போது பிடிக்காதது சரி கிடையாது. அவர் வெளியில் பேசும் போது மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்திருக்கிறீர்களா. வேற்றுமையில் ஒற்றுமை.
மேலும் இவை அவரது ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். காவி வேஷ்டி, ருத்திராட்சம் கூட இதில் இருக்கிறது’ என கூறியுள்ளார்.