பிகில் படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கவுள்ளது.
பிகில் படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கவுள்ளது.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என செல்வா என்ற உதவி இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் மனு அளித்திருந்தார். ஆனால் இதனை மறுத்த படக்குழு, விளம்பரம் நோக்கத்திற்காகவும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படவுள்ளது.