வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் அசுரன்.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் அசுரன். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் சாதியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பேசக் கூடிய படமாகும். இப்படத்தினை பல திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
தனுஷ் நடித்த படங்களுல் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்த படம் அசுரன் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். ஹிந்தி திரையுலகின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் அசுரன் படம் பற்றி, ‘அசுரன் என்ன ஒரு திரைப்படம்! உங்கள் அனைவரையும் புரட்டிப் போடும். என்னை கவர்ந்து விட்டது. வெற்றிமாறனின் கதை சொல்லும் விதத்தில் மிரண்டு விட்டேன். தனுஷ் அற்புதம் என்று பாராட்டுவதையும் மிஞ்சி விட்டார். அட்டகாசமான நடிப்பு.
சினிமாவின் வெற்றி. தயவுசெய்து அசுரன் படத்தை பாருங்கள்’ என பாராட்டியுள்ளார்.