'வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்' மலரும் நினைவுகளை பகிரும் பொன்ராம்!

இயக்குநர் பொன்ராம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம்
இயக்குநர் பொன்ராம்

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், நடிகை ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த "வருத்தப்பட்டாத வாலிபர் சங்கம்" திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளாகிறது. கடந்த 2013ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு தவிர்க்க முடியாத படமாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்

"வருத்தப்பட்டாத வாலிபர் சங்கம்" படம் தொடங்கியது முதல் முடியும் வரை நம்மை எங்கேஜிங்காவே வைத்திருக்கும். படத்தின் ப்ளஸ் சிவா-சூரி நகைச்சுவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. போஸ்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் கட்சிதமாய் பொருந்தியிருப்பார் சிவகார்த்திகேயன். நடிகை ஸ்ரீதிவ்யா பள்ளி பருவ பெண்ணாக நடித்திருந்த லதா பாண்டி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்காத ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

இயக்குநர் பொன்ராம் கெரியரிலும் ஒரு பெஸ்ட் எண்டர்டெயின் திரைப்படம் என்றே இன்று வரை சொல்லப்படுகிறது. படம் வெளியாகி 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில், குமுதம் யூட்யூப் சேனலில் பொன்ராமுடன் ஒரு நேர்காணல். பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை நம்மிடே பகிர்ந்துள்ளார் இயக்குநர் பொன்ராம்.

முழு வீடியோவை பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com