சினிமா
விரைவில் ரெடியாகும் 'கங்குவா' டீசர்... அடுத்த மாதம் வெளியீடு
'கங்குவா' திரைப்படத்தின் டீசர் விரைவில் தயாராகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இது குறித்து பேசிய அவர், இத்திரைப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமை ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது தமிழ் சினிமாவின் புதிய சாதனை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் இத்திரைப்படத்தின் டீசர் கிட்டத்தட்ட தயாராகியுள்ளதாக ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இதை அடுத்த மாதம் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.