விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்துள்ளது.இதையடுத்து லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கின்றது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அடுத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்க்கு இசையமைக்க இருக்கிறார். மேலும் தளபதி 68 படத்தில் நடிப்பதற்காக விஜய் 200 கோடி வரை சம்பளமாக வாங்கயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்படத்தின் படப்பிடிப்பு லியோ திரைப்படம் வெளியான பிறகு அக்டோபர் மாதம் துவங்கும் என்றும், அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி 68 திரைப்படம் திரையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் இருந்து வருகின்றது. அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் விஜய்யிடம் மூன்று கதைகளை கூறியுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகிவுள்ளது.சமீபத்தில் விஜய்யிடம் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதையை ஷங்கர் கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.இவ்வாறு மூன்று கதைகளை ஷங்கர் விஜய்யிடம் கூறியிருந்தாலும் விஜய் இன்றளவும் இக்கதைகளில் ஒன்றை ஓகே செய்யாமல் இருந்து வருகிறாராம்.
இதையடுத்து விஜய்யை சந்தித்த ஷங்கர் ஒரு பொலிட்டிகள் திரில்லர் கதையை கூறியுள்ளார். விஜய்க்கும் இக்கதை மிகவும் பிடித்துள்ளதாம்.எனவே தளபதி 69 அல்லது தளபதி 70 திரைப்படத்திற்காக விஜய் ஷங்கருடன் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறதாக தகவல்கள் வருகின்றன.