'பொல்லாதவன்' திரைப்படத்தில் தொடங்கி வெற்றிமாறன் - தனுஷ் ஜோடி தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளது. இந்த கூட்டணியில் உருவாகவிருந்த 'வடசென்னை 2' திரைப்படம் 'விடுதலை 2', 'வாடிவாசல்' திரைப்படங்களுக்கு பின் தொடங்கும் என்று வெற்றிமாறன் கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக வளம் வரும் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' திரைப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான பணியில் பிசியாக உள்ளார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவர், மீண்டும் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கர்நாடகாவின் கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தை கதைக்களமாக கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த மேலும் தகவல் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது