ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்ட்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் மாஸ் ஹிட்டடித்துள்ளது. தன இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்பதத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் 'பாட்ஷா' படத்திற்கு பிறகு ஆக்ஷனில் ஜெய்லரில் மாஸ் காட்டியிருக்கிறார். என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
'ஜெயிலர்' படத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். தற்போது ஜெய்லரின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. சென்னையில் டிக்கெட் தட்டுப்பாடு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அயல்நாட்டில் டிக்கெட் முன்பதிவு அமோகமாக இருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படம் துவங்கிய போது இப்படத்தில் பிரபல நடிகரான ஜெய் சர்ப்ரைஸான ஒரு ரோலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு இதைப்பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதையடுத்து ஜெயிலர் படத்தின் ஜெய் நடிக்கிறாரா? இல்லையா ? என உறுதியாக தெரியவில்லை என்றாலும் இப்படத்தில் சர்ப்ரைஸாக ஒரு நடிகர் கேமியோ செய்துள்ளார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் அது யார் என இதுவரை தெரியவில்லை.
மேலும் 'ஜெயிலர்' படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக அந்த கேமியோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பான் இந்தியா படமாக உருவெடுத்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? ரஜினி மற்றும் நெல்சனின் நம்பிக்கை, இருவரையும் வெற்றி பாதையில் அழைத்து செல்லுமா? நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று தலைவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெய்லரை நேரில் பொய் பார்த்தால் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.