சினிமா
சென்னையில் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு
சிறிய இடைவேளைக்கு பின் 'தங்கலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. இத்திரைப்படத்தின் பெருவாரியான படப்பிடிப்பு பெங்களூரு கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தில் நடந்து முடிந்தது. எஞ்சியிருக்கும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் விக்ரம் கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் 'தங்கலான்' படிப்பிடிப்பில் சிறிய இடைவேளை ஏற்பட்டது.
தற்போது 'பொன்னியின் செல்வன் 2' வெளியாகியுள்ள நிலையில் விக்ரம் 'தங்கலான்' படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இன்னும் சில கட்டங்களாக நடக்கவிருக்கும் சென்னை படப்பிடிப்பு நிறைவடைந்ததும், 'தங்கலான்' குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.