கேரள கன்னியாஸ்திரி மரியம்… புனிதராக இன்று அறிவிப்பு…

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தென்சிராவைச் சேர்ந்தவர் மரியம் திரேசியா. இவர் 1876 ஆம் ஆண்டு பிறந்தவர். 1914ஆம் ஆண்டு முதல் புத்தன்சிராவில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்ட அவர் 1926ல் காலமானார்.

கத்தோலிக்க திருச்சபையின் மரபுப்படி மரணத்திற்குப் பிறகு 2 அதிசயங்களை நிகழ்த்திய கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம் வழங்குவது போப் ஆண்டவரின் மரபு. அந்த வகையில் 2 அதிசயங்கள் நிகழ்த்தி, அதை போப் பிரான்சிஸ்சும் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இவருக்கு இன்று புனிதர் பட்டம்  அறிவிக்கப்படுகிறது 

கடந்த மாதம் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி , புனிதர் பட்டத்திற்கு தேர்வான மரியம் திரேசியாவுக்கு புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்