நவராத்திரி ஸ்பெஷல்: 4 கிலோ தங்கம், 2 கோடி ரூபாயால் அம்மனுக்கு அலங்காரம்..!

நவராத்திரியை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 2 கோடி ரூபாய் நோட்டுகள் மற்றும் 4 கிலோ தங்கத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல கோயில்களில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த கோவிலில் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் மிகவும் பிரபலமானது. 

அதன்படி இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் மற்றும் கோவிலின் உட்புறங்களில் சுமார் 2 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணமும் நான்கு கிலோ மதிப்பினாலான தங்கமும் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்