ஜீவசமாதி அடைய சாமியார் அறிவிப்பு… காத்திருக்கும் பக்தர்கள்…

சிவகங்கை அருகேயுள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்ப சாமிகள். 71 வயதாகும் இவர் ஆன்மிக நாட்டம் காரணமாக சாமியாராக இப்பகுதியில் அறியப்பட்டார்.

  தான் இன்னும் ஒரு மாதத்தில் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்ததுடன், அன்றிலிருந்து உணவைத் தவிர்த்து, தண்ணீர் மட்டும் அருந்தி வந்தார்.

தனக்கு சொந்தமான இடத்தில் ஜீவசமாதி அடைவதாகவும், அந்த இடத்தில் தனக்கு சமாதி எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அப் பகுதியில் சமாதி அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

சாமியாரின் ஜீவசமாதி அறிவிப்பு தகவல் கிடைத்து அக்கம் பக்கத்து கிராமத்து மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து, அவரிடம் ஆசி வாங்கி வருகின்றனர். சாமியாரின் இறப்புக்கு அடுத்து அவரது உடல் சமாதியில் அடக்கம் செய்யப்படும் என்று அப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்