இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை….

இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை….

 

1970 ம் வருடம்..

 திருவனந்தபுரம்

கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து

கொண்டிருந்தார்..

 அப்போது நாத்திக

இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்..

அந்த வயதானவரை

பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமானபகவத் கீதையை

படிப்பார்கள் என கிண்டல் செய்தான்.  இதை படித்த

நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்...

 அந்த வயதானவரோ தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்..

 

இளைஞன்...

 நான் கொல்கத்தாவில்

படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன்...தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி

படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்...

 நீங்களும் இப்படி

வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சி யில் ஈடுபடலாமே என்றான்..

 பதில் பேசாமல்

சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்தும் எங்கிருந்தோ வேகமாகநாலு பாதுகாவலர்கள் ஓடி

வந்து அவரை சுற்றி நின்றனர்..விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில்

நின்றது..

 அதிர்ந்து போன

இளைஞன் ஐயா நீங்கள் யார்? என்றான்..

 அதற்கு அவரோ

சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய்...

பாபா அணு ஆராய்ச்சி

கழகத்தின் தலைவர் என்றார்...அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன..அத்தனைக்கும்

தலைவர் இவரே..

 இப்பொழுது அதிர்ந்து

போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்...

 சாராபாய் சிரித்து

கொண்டே கூறினார்...

தம்பி.. ஒவ்வொரு

படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான்..

 அது மகாபாரத

காலமாகஇருந்தாலும் சரி..இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி...கடவுளை மறக்காதே.

 இன்று நாத்திகர்கள்

அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம்..

 ஆனால் வரலாறு

சொல்லும்..

 அறிவியலை உருவாக்கியது

கடவுள் நம்பிக்கையாளர்கள் தான்..என்று

 இறைவன் என்பது

ஒரு முடிவில்லா உண்மை....

பரந்தாமனின்

மொழிகள் (கீதை)

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்