வைத்தீஸ்வரன் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
சீர்காழி அருகே அமைந்திருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலில்,லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.
சிறப்புகளுக்கு பெயர்ப்போன இந்தக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக,காரைக்குடி,கந்தர்வக்கோட்டை, சிவகங்கை, பரமகுடி,மானாமதுரை,திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து, தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து ,நடைபயணமாகப் புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை கோவிலை வந்துச் சேர்கின்றனர்.
இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் திரளான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றி கொள்வது வழக்கம். இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு தங்களின் குலதெய்வமான தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதலுக்காகவும், வழி துணையாகவும் கொண்டு வந்ததிருந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு பிறகு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர்.
மீண்டும் அடுத்த வருடத்திற்க்கு, மறு வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்குக் கொண்டுச் செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக சீர்காழி,மயிலாடுதுறை, சிதம்பரம்,தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.