நான்கு நாட்களுக்கு முன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி கும்பிடும் போது இம்மரத்தினில் அம்மன் கண் தெரிந்தது என்று கூறினர்.
திருச்சி மாவட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள பி மேட்டூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையில் ஓரமாக நவகிரகங்கள், நாகநாதர், பிள்ளையார் சன்னதிகள் அமைந்துள்ளன.
இந்த சன்னதியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றிணைந்து வளர்ந்துள்ளது. இந்த இரண்டு மரமும் ஒன்றிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள் போல் உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இம்மரங்களைக் கண்டு வியப்பதுண்டு.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி கும்பிடும்போது, இம்மரத்தினில் அம்மன் கண் தெரிந்தது என்று கூறினர். இதனை பக்தர்கள் அனைவரும் அதிசயம் என்று வியந்து பேசினார்கள்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்ல காட்டுத் தியாகப் பரவியது. இதன் பின் அந்த அதிசயத்தைக் காண ஏராளனமான மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார மக்கள் தினம்தோறும் வந்து இந்த அதிசயத்தை கண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கிறார்கள்.
இப்போது அந்த இடத்தில் திடீர் பூக்கடைகளும் முளைத்துள்ளன. பக்தர்கள் பூவை வாங்கி மரத்தடியில் படைத்துவிட்டு மரத்தின் வேரில் பால் ஊற்றி பயபக்தியுடன் வணங்கி விட்டு போகிறார்கள்.