திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.71 கோடி

திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை  ரூ.2.71 கோடி

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தை மற்றும் மாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் (14.03.23) நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய இந்த பணி இரவு 7 மணி அளவில் நிறைவு பெற்றது. ரூ.2 கோடி 81 லட்சம் 18 ஆயிரத்து 750 பணமாகவும், 405 கிராம் தங்கமும், 2,385 கிராம் வெள்ளியும் பக்தர்கள் அண்ணாமலையாருக்குக் காணிக்கை செலுத்தியுள்ளனர்

மேலும் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு கரன்சிகள் இந்தியப் பண மதிப்புக்கு ஏற்ப பரிமாற்றம் செய்யப்பட்டு கோயில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

கடந்த ஜனவரி மாதத்தில் திருவண்ணாமலை கோயில் உண்டியலில் ரூ.2.71 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை கூடுதல் தொகை செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த பணிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்