கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருவீதி விழா

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருவீதி விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், மாசி மாதத்தில் நடைபெறும் மாசிமக விழா இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழா கடந்த பிப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நான்காம் நாளில், அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது

ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் தேரோட்டம் நடைபெறும் வீதியில், இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின்  திருவீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்