திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைத்திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6.43 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம், தவத்திரு.

 திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வசித்குமார், திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர் பா.கணேசன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்