தமிழகத்தில் 115 கோயில்களில் திருப்பணிகள் தொடக்கம்

ஆகம விதிப்படி கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும். அந்த வகையில் சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவும் விரைவில் நடைபெறப் போவதாகக் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், ஆகம வல்லுநர் குழுவினர், பொறியாளர்கள், தொல்லியல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் 115 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தர்மபுரி காரிமங்கலம் செல்லியம்மன் கோயில், திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் , தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது.
இந்த திட்டப்பணியில் சேதமடைந்த மண்டபம் மற்றும் சன்னதி கோபுரங்களின் சீரமைப்பு பணிகள் தொன்மை மாறாமல் மேற்கொள்ளப்படும்.
தொல்லியல் ஆர்வலர் கூறுகையில் பேளூரில் அமைந்திருக்கும் தான்தோன்றீஸ்வரர்கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. சுயம்புவாக அவதரித்த தான்தோன்றீஸ்வரர் அறம் வளர்த்த அம்மையுடன் அமர்ந்து அருள்பாளிக்கிறார். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் தலவிருட்சமாக மா, பலா, இளுப்பை என்று 3 மரங்களும் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை