"கொதிக்கும் நெய்யில்" வெறும் கைகளால் அப்பம் சுட்ட மூதாட்டி!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார்பட்டித் தெருவில் பத்தரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்குக் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி  மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யை எடுத்து வந்து பக்தர்களின் நெற்றில் பூசி விடுவார்கள்.தற்போது முத்தம்மாள் என்ற மூதாட்டி 40 நாட்கள் விரதம் இருந்து அப்பம் சுட்டு வருகிறார்.

இக்கோவிலில் நடைபெறும் வினோத நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவர். முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவற்றை உறலில் வைத்து இடித்து அப்பத்திற்குத் தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை இடிப்பதற்குப் பெண்கள் நேர்த்திக் கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பார்கள். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற அனைத்து விதமான நோய்களும் சரியாகிவிடும். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி வெறும் கையினால் கொதிக்கும் நெயில் அப்பம் சுடும் நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பக்தர்கள் குவிந்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்