மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று  மாலை 5 மணிக்குத் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாரதனை காட்டினார்.

பின் ஆழிகுண்டத்தில் நெய் தேங்காய்க்கு தீ  மூட்டினார். இன்று வேறு சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் தொடங்கும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இன்று பிற்பகலுக்குப் பின்னர் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இம்முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்