"சுடும் வெயில் " கடுப்பான சுற்றுலா பயணிகள்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இக் கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலைக்கும் - சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலின் அழகை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோவிலை கண்டு ரசித்து செல்கின்றனர்.
தஞ்சை பெரிய கோவில் தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் கோவிலில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக்கலையும் - சிற்பக்கலையும் நின்று ரசிக்க முடியவில்லை எனவும் அதேபோல் முதியவர்கள் - குழந்தைகள் கோயிலின் வளாகத்தில் நடக்க முடியாமல் கடும் வெயிலில் தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்குற்ற
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கழிவறை வசதிகள் குடிநீர் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தஞ்சை கோவிலுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை