திருப்பதி: மார்ச் மாத அங்கப்பிரதட்சண டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: மார்ச் மாத அங்கப்பிரதட்சண  டிக்கெட் இன்று ஆன்லைனில்  வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம்  அங்கப்பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இன்று  காலை 11:00 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் டோக்கன்கள் பெறுவதற்குப் பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இனிமேல் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெறுவதற்குப் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் ஆன்லைனில் முன்பதிவு செய்ய தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இது தவிர இம்மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் கூறி உள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www.tirupatibalaji.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்