நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் மகா சிவராத்திரி திருவிழா

நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் மகா சிவராத்திரி திருவிழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாணதிருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 22-ம்தேதி வரையிலும் 11 நாட்கள் நடைபெறுகின்றது.

 

திருவிழாவின் முதல் நாளான நாளை காலை 10.30 மணியில் இருந்து 12 மணிக்குள் சாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகின்றது.

இதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் சுவாமி தங்க நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.  வரும் 18-ம் தேதி மாசி மகா சிவராத்திரி  நடைபெறுகின்றது. 

நாளை முதல் திருவிழா தொடங்குவதை தொடர்ந்து தினமும் இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். 

அது போல் தினமும் காலை அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்