சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 1.37 கோடியில் பக்தர்கள் காணிக்கை!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 1.37 கோடியில் பக்தர்கள் காணிக்கை!

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.நேர்த்திக் கடனை நிறைவேற்றி கொண்டு  உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர். 

பக்தர்களால் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கைகள் கோவில் நிர்வாகத்தின் மேற்பார்வையில் மாதம் இருமுறை  எண்ணப்பட்டு வருவது வழக்கம்.

அதே போல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட  18 உண்டியல்களிலிருந்த காணிக்கைகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர்  எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ 1கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 882 ரூபாய் ரொக்க பணமும், 3 கிலோ 181 கிராம் தங்கம், 4 கிலோ 730 கிராம் வெள்ளி, அயல்நாட்டு நோட்டுகள் 206ம், அயல்நாட்டு நாணயங்கள் 551ம் காணிக்கைகளாக பெறப்பட்டன என கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் 11 நாட்கள் உற்சவ அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி  வீதி உலா வந்த போது தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டதில் மட்டும் ரூ 86 ஆயிரத்து 423 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்