ஆன்மீகம்
கால் வலி சரியாக ’ புதுச் செருப்பு’ காணிக்கை! திட்டக்குடி அருகே விநோதம்!!
கால் வலி சரியாக ’ புதுச் செருப்பு’ காணிக்கை! திட்டக்குடி அருகே விநோதம்!!
இங்கு வந்து புது செருப்பை அய்யனார் சிலை அருகே வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்
கடவுளுக்கு காணிக்கையாக தங்கம், வெள்ளி, பணம் என்று பக்தர்கள் கொட்டிக் கொடுக்கும் நிலையில், தங்கள் கால் வலி தீர காலணியை காணிக்கையாக வழங்கும் பழக்கம், திட்டக்குடி அருகே உள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கொற்கை பகுதியில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
இந்தப் பகுதி மக்கள், தங்களுக்கு கால் வலி இருந்தால், அய்யனாருக்கு புது செருப்பு வழங்குவதாக வேண்டுதல் செய்து, அதன்படி, இங்கு வந்து புது செருப்பை அய்யனார் சிலை அருகே வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் மரத்திலும் செருப்பை கட்டி தொங்க விடுகின்றனர்.
இந்த விநோத பழக்கம் நீண்ட காலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.